நாட்டை விட்டு வெளியேற முயன்றவர் விமான நிலையத்தில் கைது
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் பெண்ணொருவரை கொடூரமாக கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
கஹதுடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் நேற்று மாலை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் ஊழியராக பணியாற்றிய 41 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
தவறான உறவு
மடபாத்த, பிரியன்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண், வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, தாக்கப்பட்டுள்ளார். விசாரணையில், திருமணத்துக்கு புறம்பான தொடர்பு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த பெண்ணைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் 45 வயதுடைய நபர், நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட வேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பல வருடங்களாக வெளிநாட்டில் வசித்த அவர் நாட்டிற்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri