வெளிநாடு சென்று இலங்கை திரும்பியவருக்கு விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி
டுபாயில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது வங்கிக் கணக்கு மூலம் 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணப் பரிமாற்றம் செய்தமை தொடர்பாக தேடப்பட்டு வந்த நபர் டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் மத்திய வங்கியின் மத்திய புலனாய்வுப் பிரிவின் இரகசிய தகவலை தொடர்ந்து, நேற்று குறித்த நபர் நாடு திரும்பும் போது கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலனாய்வுப் பிரிவு
கைது செய்யப்பட்ட நபர் பிலியந்தலையைச் சேர்ந்தவர் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நபருக்குச் சொந்தமான வங்கிக் கணக்கு மூலம் நடைபெறும் அசாதாரண நிதி பரிவர்த்தனைகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அளித்த முறைப்பாட்டிற்கமைய, விசாரணையின் போது, இவ்வளவு பெரிய தொகையை பெறுவதற்கு அவருக்கு எந்த வணிகமோ அல்லது வருமான ஆதாரமோ இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
பண பரிமாற்றம்
மேலும் விசாரணையில் அவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அவரை தேடிய போது அவர் நாட்டை விட்டு வெளியேற நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த விடயத்தை நீதிமன்றத்தில் தெரியப்படுத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், அவருக்கு எதிராக பயணத் தடையைப் பெற்றுள்ளனர். அதன்படி, அவர் நாடு திரும்பியதும் அவரைக் கைது செய்ய முடிந்துள்ளது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
