இந்தியாவின் பல பகுதிகளில் பதிவான நிலநடுக்கம்
இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று(10) நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, டெல்லி, நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் 4.4 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
அத்துடன், உத்தர பிரதேசம், மீருட் மற்றும் சம்லி உள்ளிட்ட பகுதிகளிலேயே இவ்வாறு நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது வீடுகளிலிருந்து வெளியேறி
டெல்லி மற்றும் நொய்டா ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் நில அதிர்வு உணரப்பட்டதை அடுத்து தமது வீடுகளிலிருந்து வெளியேறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tremors Felt In Delhi, Noida, Gurugram, Faridabad: 4.4 Magnitude #Earthquake Hits Delhi-NCR at 09:04:50 IST; Epicentre In Haryana's Jhajjar.
— Sarbjeet Johal (@sarbjeetjohal) July 10, 2025
I checked with few friends there, things are fine with them! pic.twitter.com/fWPIJQkHMp
அத்துடன், நில அதிர்வால் உயிர்ச்சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல் Cineulagam
