கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க விமான நிலைய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மாத்தறை, துடாவ பகுதியைச் சேர்ந்த 44 வயதான சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரிகளுக்கு இடையூறு
வெளிநாட்டிலிருந்து நேற்று காலை 7.48 மணிக்கு Fly டுபாய் விமானமான FZ-579 மூலம் டுபாய் வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளின் ஒரு தொகையையும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான விஸ்கி போத்தல் ஒரு தொகையையும் அவர் தனது பொதிகளில் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.
அவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டபோது, அவர் விஸ்கி போத்தல்களை தரையில் வீசி எறிந்ததாகவும், சுங்க அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNELஇல் இணையுங்கள் JOIN NOW |
