வெடிபொருளுடன் விமான நிலையத்திற்குள் நுழைய முற்பட்ட நபர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் வெடிபொருளுடன் நுழைய முற்பட்ட நபரொருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து 25 கிலோகிராம் பொட்டாசியம் பெர்குளோரேட் என்ற வெடிபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வாடகை வாகன சாரதி எனவும், குறித்த வாகனத்தின் உரிமையாளர் நீர்கொழும்பு - கிம்புலாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் வர்த்தகர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
விசாரணைகளின் போது குறித்த வாகனத்தினை, பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைக்கு கொண்டு செல்வதாகவும் விமான நிலையத்தில் தமது வாடகை வாகனத்தின் பயணம் நிறைவடைய உள்ள நிலையில், தாம் வாகனத்தினை விமான நிலையம் நோக்கி விரைவாக செலுத்தியமையால், அதிலிருந்த வெடிபொருளை அகற்ற மறந்துவிட்டதாகவும், சந்தேகநபர் தெரிவித்துள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan