குண்டுவெடிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்டவர் சுட்டுக்கொலை
ஏர் இந்தியா விமானம் மீது 1985 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒருவர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ரிபுதமன் சிங் மாலிக் என்பவரே பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரேயில் தனது சிற்றூந்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது இன்று(15) சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
அத்துடன் அவருடைய சிற்றூந்து எரிந்த நிலையில் காவல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
329 பேரை கொன்ற பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடவில்லை என்று கூறப்பட்டு 2005 இல் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சீக்கிய மதத்தின் புனித தலமான பொற்கோவிலை 1984ல் இந்தியா தாக்கியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடாவை தளமாக கொண்ட சீக்கியர்களால் 1985ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் திகதி குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டுள்ளது.
அந்த சம்பவம் கனடாவின் கொடிய பயங்கரவாத தாக்குதலாகவே தற்போது வரை உள்ளது.
இரண்டு வருட விசாரணைக்கு பிறகு சீக்கிய தொழிலதிபர் மாலிக் மற்றும் இணை குற்றவாளியான அஜய்ப் சிங் பக்ரி ஆகியோர் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கனேடிய பொலிஸார் மாலிக்கை குறிவைத்து கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள நோக்கத்தை கண்டறிய இன்னும் பணியாற்றி வருவதாக கூறியுள்ளனர்.
மேலும் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்
கனடாவில் இருந்து இந்தியாவிற்கு பயணித்த ஏர் இந்தியா வானூர்தி ஐரிஷ் கடற்கரையில் வெடித்து சிதறியது. அதில் இருந்த 329 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலோர் கனேடிய குடிமக்கள் இந்தியாவில் உள்ள உறவினர்களை பார்க்க சென்றவர்களாவர்.
அதே நாட்களில் ஜப்பானில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் பொதிகளை கையாளும் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்களின் பின்னர், பக்ரி மற்றும் மாலிக் ஆகியோர் விமானத்தில் குண்டுகளை வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.