மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்
இராம பிராணால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 02ஆம் திகதி வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு இராஜகோபுரம், மூலஸ்தானம் மற்றும் ஏனைய பரிபாலன ஆலயங்களுக்கான கலசம் வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியனவற்றினை ஒருங்கே கொண்ட ஆடி அமாவாசையில் பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தக்கேணியையும் கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக கிரியைகள் கடந்த 23ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

இன்றை தினம் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் ஆலயத்தின் இராஜகோபுரம் மற்றும் மூலஸ்தானம் மற்றும் ஏனைய பரிபாலன ஆலயங்களுக்கான கலசம் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
நாளை வெள்ளிக்கிழமை(27) தொடக்கம் திங்கட்கிழமை(30) வரையில் அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
நாளை காலை 9.00மணி தொடக்கம் அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 02ஆம் திகதி புதன்கிழமை மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.






மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்... இத்தனை கோடியா? Cineulagam