மல்வத்த பீடத்தில் இருந்து நீக்கப்பட்ட இலங்கையின் முக்கிய பௌத்த தேரர்
பதுலுகம்மன சுமனசார தேரர் என்ற பௌத்த பிக்கு பிபில நாகல ரஜமஹா விகாரையின் பிரதம விஹாராதிபதி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், கோட்பாட்டை திரிபுபடுத்தி சங்க சாசன நெறிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மல்வத்த பீடத்திலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
பதவி நீக்கம்
மல்வத்தை பீடத்தின் பிரதம பதிவாளர் தலைமையில், 2024 ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆம் திகதி கூடிய மல்வத்த பீடத்தின் செயற்குழு, மஹாசங்கத்தின் உன்னத மரபுகளை மீறியமைக்காக சுமனசார தேரருக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்தது.
இருப்பினும், 2025 ஒகஸ்ட் 11, 2024 அன்று அவர் மீண்டும் அழைக்கப்பட்டு, சங்க சாசனத்தின் விதிமுறைகளையும் பௌத்த துறவிகளின் ஒழுக்கத்தையும் கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டார்.
அவர், அதற்கு உடன்பட்டாலும், பௌத்த துறவிக்கு பொருந்தாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு வந்தது இதன் ஒருக்கட்டமாக அவர், சங்க சாசனத்தின் மரபுகளையும் கௌதம புத்தரின் பிரசங்கங்களையும் சிதைக்கும் "செஹெல கௌதம ஸ்ரீ சம்பத்த மகா நிகாயா" என்ற தனது சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒரு புதிய பிரிவை உருவாக்கினார்.
இதனையடுத்தே மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் திப்போட்டுவேவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தலைமையிலான செயற்குழு, கூடி, சுமனசார தேரரை அவரது பதவிகளில் இருந்து நீக்கவும், மல்வத்த பீடத்திலிருந்து அவரை வெளியேற்றவும் முடிவு செய்துள்ளது.





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

சோழனை கடத்தியது யார், நிலாவிடம் மொத்த உண்மையையும் கூறிய பல்லவன்.. அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam

ஆபத்தான நிலையில் ஈஸ்வரி, தனது அம்மாவுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
