எஹலியகொட பியர் கொள்ளை! கவலை வெளியிட்டுள்ள மலிங்க
எஹலியகொட பகுதியில் மதுபானத்தை ஏற்றிச்சென்ற பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானமையும், அப்போது அங்கு கூடிய மக்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் சமூக ஊடகங்களில் பேசுபொருளானது.
பாரவூர்தி விபத்துக்குள்ளான பிறகு, அதில் சிதறிக் கிடந்த மதுபான போத்தல்களை எடுக்க மக்கள் விரைந்து சென்றமையை ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டன.
இது தொடர்பாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தனது முகநூலில் ஒரு குறிப்பை பதிவிட்டுள்ளார்.
225 திருடர்கள்
குறித்த குறிப்பில் "நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
225 திருடர்களால் இந்த நாடு தொலைந்து போனது என்று ஒரு பெரிய சத்தம் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது.
அவ்வப்போது 75 ஆண்டுகாலமாக நாட்டில் நிலவிய சாபம் பற்றிய உரத்த குரல்கள் ஒலித்தமையை என்னால் இன்னும் கேட்க முடிகிறது.
ஆனால் தற்போது அந்த அமைப்பு மாறிவிட்டதாகத் தெரிகிறது.
அதற்காக மூலதனமாக்கப்பட்ட கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தற்போது இல்லாமை ஆச்சரியமாக இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்

மூளையில் பொருத்தப்பட்ட எலான் மஸ்க் நிறுவன சிப் - நினைப்பதன் மூலம் செயல்களை செய்யும் நபர் News Lankasri

வீட்டில் பள்ளம் தோண்டும்போது தங்கம் கிடைத்ததாக கூறிய நபர்கள்: தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
