மாலி நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கொல்லப்பட்டார்: அல்கொய்தா - துவாரெக் கிளர்ச்சியாளர்கள் பயங்கரத் தாக்குதல்
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் (Mali) பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாடியோ காமரா, நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாலி இராணுவ அரசாங்கத்தின் மிக முக்கியத் தூணாகவும், அந்நாட்டின் எதிர்காலத் தலைவராகவும் கருதப்பட்ட இவரது மறைவு, அந்நாட்டுப் பாதுகாப்புப் படைகளுக்குப் பேரிடியாகக் கருதப்படுகிறது.
தலைநகர் பமாகோவிற்கு அருகே உள்ள காட்டி (Kati) என்ற பலத்த பாதுகாப்பு நிறைந்த இராணுவ நகரில் பாதுகாப்பு அமைச்சரின் இல்லம் அமைந்துள்ளது. சனிக்கிழமை அன்று, தற்கொலைப்படை கார் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச் சூடு மூலம் இந்த இல்லம் இலக்கு வைக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூடு
அல்கொய்தாவுடன் தொடர்புடைய JNIM என்ற அமைப்பு மற்றும் துவாரெக் (Tuareg) கிளர்ச்சியாளர்கள் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். காட்டி நகரில் வசிக்கும் இடைக்கால ஜனாதிபதி அசிமி கோயிட்டா (Assimi Goita) பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டதால், அவர் காயமின்றி உயிர் தப்பினார்.

மாலியின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் உள்ள காவோ (Gao), கிதால் (Kidal) மற்றும் சேவரே (Sevare) உள்ளிட்ட பல முக்கிய நகரங்களிலும் ஒரே நேரத்தில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
கிதால் நகரில் 24 மணி நேரத்திற்கும் மேலாகத் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்பதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக தங்களுக்குள் மோதிக்கொள்ளும் பல்வேறு கிளர்ச்சியாளர் குழுக்கள், தற்போது மாலி அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றுசேர்ந்து இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டிருப்பது பாதுகாப்பு ஆய்வாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
மாலி பாதுகாப்பு அமைச்சரின் கொலை மற்றும் நாடு தழுவிய இந்தத் தாக்குதல்களுக்கு ஆப்பிரிக்க யூனியன் (AU), இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) மற்றும் அமெரிக்க ஆப்பிரிக்க விவகாரங்கள் பணியகம் ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் நடந்த இராணுவப் புரட்சிகளுக்குப் பிறகு, மாலியில் பாதுகாப்புச் சூழல் தொடர்ந்து மோசமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 8 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam