அமெரிக்க - ஈரான் ஒப்பந்தம் அரபு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஜோர்தான் மன்னர்
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்படும் எந்தவொரு உடன்படிக்கையும் அரபு நாடுகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதாக அமைய வேண்டும் என ஜோர்தான் மன்னர் இரண்டாம் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
குவைத் வெளியுறவு அமைச்சர் ஜர்ரா ஜாபர் அல்-அஹ்மத் அல்-சபாவைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிப்பதற்கான கூட்டு அரபு நடவடிக்கைகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

"வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு என்பது பிராந்தியத்தினதும் உலகினதும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அடிப்படையானது" என்று மன்னர் அப்துல்லாஹ் இதன்போது ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் அமெரிக்கா முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகளின் போது அண்டை நாடுகளின் பாதுகாப்பு நலன்கள் புறக்கணிக்கப்படக் கூடாது என்பதையே ஜோர்தான் மன்னரின் இந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 18 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam