கொத்மலை ரம்பொட பூனாஓயாவில் ஆணின் சடலம் மீட்பு(Video)
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்மலை - ரம்பொட தோட்டத்தில் உள்ள கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனாஓயாவில் ஆணின் சடலம் ஒன்று இன்று காலை 11.45 மணியளவில் மீட்கப்பட்டதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமொன்று குறித்த ஓயாவில் இருப்பதைக் கண்ட பிரதேசவாசிகள் கொத்மலை பொலிஸருக்கு அறிவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட ஆண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து ஓயாவில் எரிந்து சென்றார்களா அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா என பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. சுமார் 40ற்கும், 50ற்கும் இடையிலான வயது மதிக்கத்தக்க ஆண் எனவும் மேலதிக விசாரணைகளைத் தொடர்வதாகவும் கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும்
தெரிவித்துள்ளனர்.


நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri