இன்று இலங்கைக்கு வருகிறார் மாலைதீவு ஜனாதிபதி
மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்ஸு, 2023-ல் பதவியேற்ற பிறகு இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் அரசமுறைப் பயணமாக, இன்று (03) இலங்கைக்கு வருகை தர உள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் அவர் வருகை தருவார் என்றும், 6ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை விஜயம்
இந்தப் பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி முய்ஸு, ஜனாதிபதி திசாநாயக்கவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இந்த வருகையை முன்னிட்டு இன்று (03) முதல் 6ஆம் திகதி வரை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம் நடைமுறையில் இருக்கும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருட்களை கடத்தி வந்த 22 தேரர்கள்! சரணடைந்த தொழிலதிபர் - சம்மந்தப்பட்டுள்ள பிரித்தானிய நாட்டவர்
சிந்தாமணியின் சூழ்ச்சி.. சொந்த வீட்டை விட்டு வெளியேறும் அண்ணாமலை குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam