துருக்கியில் இருந்து இராணுவ ட்ரோன்கள் வாங்கிய மாலைதீவு
கடல் பகுதியில் ரோந்து பணிக்கு துருக்கியிடம் இருந்து ட்ரோன்களை மாலைதீவு அரசு வாங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துருக்கி நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அடுத்து முதல் முறையாக இராணுவ ட்ரோன்கள் மாலைதீவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதோடு சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இராணுவ ஒத்துழைப்பு
மேலும், அந்நாட்டுடன் இராணுவம் ஒத்துழைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள நிலையிலே கடல் பகுதியில் ரோந்து பணிக்கு துருக்கியிடம் இருந்து ட்ரோன்களை மாலைதீவு அரசு வாங்கியுள்ளது.

குறி்த்த ட்ரோன்கள் தற்போது நூனு மாபாரு சர்வதேச விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விரைவில் ட்ரோன்கள் செயல்பாடு தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளதோடு, எத்தனை ட்ரோன்கள் வாங்கப்பட்டுள்ளன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri