கோட்டாபயவை நானே காப்பாற்றினேன்: மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி தெரிவிப்பு
அரகலய போராட்டக்காலத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa ) தானே உயிராபத்தில் இருந்து காப்பாற்றியதாக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் (Mohamed Nasheed) தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
"நீண்டகாலமாக பாதுகாக்கப்பட்ட இலங்கையின் ஜனநாயகம் குறித்த பெருமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் அரகலய போராட்டம் நடந்து.
அரகலய போராட்டம்
இதன்போது, இலங்கை ஜனாதிபதியொருவர் அடித்துக் கொல்லப்படுவதை தடுப்பதற்காக 2022 ஜூலை மாதம் 12ஆம் திகதி அவர் தப்பியோடுவதற்கு உதவி செய்தேன்.
வேறு பல நாடுகளை போல இலங்கை ஒருபோதும் சதிப்புரட்சியை எதிர்கொண்டது இல்லை. உள்நாட்டு யுத்தத்தின் போது கூட இலங்கை தேர்தல்களை தவறவிட்டது இல்லை. நாடு எப்போதும் தேர்தல் மூலமே அதிகார மாற்றத்தில் ஈடுபட்டுள்ளது.
மேலும், இலங்கையில் ஜனாதிபதி ஒருவர் ஒருபோதும் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்படவில்லை. அவர்கள் ஒருபோதும் ஜனாதிபதியை கைது செய்ததும் இல்லை.
ஜனாதிபதி பதவி
அதேவேளை, நான், எனது ஜனாதிபதி காலத்தில் எதிர்கொண்டது போன்ற நிலைமை இலங்கையில் காணப்பட்டது. கொழும்பு (Colombo) அதனை எதிர்கொள்வதை நான் விரும்பவில்லை.
ஆனால், இன்றும் அதே அரசாங்கம் பதவியில் உள்ளது. ஜனாதிபதி மாத்திரம் தான் மாறியுள்ளார். 2009 யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் இன்றும் அப்படியே இருக்கின்றன.
எனவே, நான் மாலேயில் (Malé) எதிர்கொண்ட விடயங்கள் கொழும்பில் இடம்பெற்றால் தென்னாசியா முழுவதும் அது எதிரொலிக்கும்.
அரசியல் மாற்றம்
மேலும், தென்னாசியா தப்பிப் பிழைக்காது என நான் கருதினேன். அதோடு இலங்கை மக்கள் வேறு ஒரு அரசியல் ஏற்பாட்டை செய்துகொள்வதற்கு உதவுவதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைத்துள்ளதாக நான் கருதினேன்.
ஆகையால், எனது மனதில் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவது வேறு எதனையும் விட முக்கியமானதாக காணப்பட்டது. ஜனாதிபதி அந்த காலகட்டத்தில் பதவி விலக தயராகயிருக்கவில்லை. அவர் அதிக வலுவானவராக காணப்பட்டார்.
அது மாத்திரமன்றி, அவரின் கட்டுப்பாட்டின் கீழ் படையினர் காணப்பட்டனர். இந்நிலையில், இராணுவம் தலையிட முடியாது என எப்படி நான் எதிர்பார்க்காமல் இருக்கமுடியும் என நான் கேள்வியெழுப்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
