ஜெனீவா செல்லவுள்ள பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை
தமிழர்கள் ஜெனீவா மனித உரிமைச் சபையிடமல்ல இலங்கையிடமே நீதியைக் கோர வேண்டுமெனக் கூறிய பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, தற்போது உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக நீதி கோரி ஜெனீவாவுக்குச் செல்லவுள்ளார் என மூத்த ஊடகவியலாளர் நிக்சன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது முகப்புத்தக பக்கத்தில் அவர் இட்டுள்ள பதிவில் மேலும்,
ரவூப் ஹக்கீம் 2012ஆம் ஆண்டு ஜெனீவாவுக்குச் சென்று இலங்கையைக் காப்பாற்றினார். ஆனால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அரசியல் பழிவாங்கல்களினால் பாதிக்கப்பட்டதொரு நிலையில், தற்போது ஜெனீவாவிடம் நீதிகோரும் அளவுக்கு முஸ்லிம்களின் நிலைமையும் தலைகீழ்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி இன்று தமிழரசுக் கட்சி கையெழுத்துப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. ஆனால் இந்தச் சட்டம் ஐக்கிய தேசியக் கட்சியினால் உருவாக்கப்பட்டது.
2015 இல் ரணில் விக்ரமசிங்கவுடன் தேன்நிலவில் இருந்த காலத்தில் தமிழரசுக் கட்சி இந்தச் சட்டத்தை நீக்க வேண்டுமெனக் கோரவில்லை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தைவிட இலங்கையின் தேசிய பாதுகாப்பு என்பதுதான் அச்சறுத்தல். தேசிய பாதுகாப்பு என்பது ஒவ்வொரு நாட்டிலும் உண்டு.
ஆனால் இலங்கையில் தேசிய பாதுகாப்பு என்பது தமிழர்களை நோக்கியதாகவே இருக்கிறது. ஆகவே தேசிய பாதுகாப்பு தமிழர்களை மையப்படுத்திய அச்சுறுத்தல் என்பதையே தமிழரசுக் கட்சி வெளிப்படுத்த வேண்டும்.
ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் அந்தப் பொறுப்பு உண்டு. 2012 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஈழத்தமிழர்களின் நீதிக்கானது என்ற நிலையில் இருந்து படிப்படியதாக இலங்கையின் மனித உரிமை மீறல் பிரச்சினையாகச் சுருக்கப்பட்டு, 2015 ஆம் ஆண்டு ஜெனீவாவில் அது வடக்கு மாகாணப் பிரச்சினையாக மேலும் சுருங்கியது.
கிழக்கு மாகாணம் அப்படியே விடுபட்டுள்ளது. தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை, அச்சுறுத்தல், தமிழ் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் என்பது 1981 இல் ஆரம்பித்து 2009 வரை உச்சம் தொட்டது.
ஆனாலும் இன்று வரை மெது மெதுவாத் தொடருகிறது. ஆனால் சிங்கள ஊடகவியலாளர் லந்த விக்கிரமதுங்க மற்றும் வேறு சில சிங்கள ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் விசாரணைகள் மாத்திரம் ஒப்பாசாரத்துக்காக நடத்தப்பட்டுத் தற்போது சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீதான தாக்குதல் விசாரணையோடு வந்து நிற்கிறது.
இப்படித்தான் 1987 இல் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக மாகாண சபைகள் முறையை வடக்குக் கிழக்கு மாகாணத்துக்கு என்று கொண்டு வந்து, இறுதியில் சிங்களப் பிரதேசங்களிலும் மாகாண சபை முறை அறிமுகம் செய்யப்பட்டது.
அதற்குச் அன்று சொல்லப்பட்ட கதை, சிங்கள மக்களையும் திருப்திப்படுத்த வேண்டுமென்பதே இப்போது இந்தியா 2.4 பில்லியன் டொலரைக் கொடுக்கவுள்ளது.
அதற்கு இன்று சொல்லப்படும் கதை - 13 ஐ நடைமுறைப்படுத்த வேண்டுமானால் முதலில் சிங்கள மக்களை இந்தியா ஆசுவாசப்படுத்த வேண்டும் என்பதே.
மறுக்கப்பட்ட நீதி என்பது இதுதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 5 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri