10 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானம்! ஆழ்கடலில் தேடும் பணி மீண்டும் ஆரம்பம்..

Malaysia Flight World
By Shadhu Shanker Dec 03, 2025 10:41 PM GMT
Report

மலேஷியா ஏர்லைன்ஸ் விமானம் MH370 காணாமலாகி 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில், அதைத் தேடும் பணி இந்த மாதம் மீண்டும் தொடங்கப்படுவதாக மலேஷியா போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

நேற்றையதினம்(3) வெளியிட்ட அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலேஷியா ஏர்லைன்ஸ் விமானம்

இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட கடல் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் 'ஓஷன் இன்ஃபினிட்டி' டிசம்பர் 30 ஆம் திகதி முதல் கடலடி தேடலை மீண்டும் தொடங்கும் எனவும், இது 55 நாட்கள் இடைவெளியில் நடைபெறும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானம்! ஆழ்கடலில் தேடும் பணி மீண்டும் ஆரம்பம்.. | Malaysia Mh370 Missing Aircraft Search Relaunched

இந்த புதிய தேடலானது, காணாமல் போன விமானம் இருப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ள பகுதிகளின் மீது கவனம் செலுத்தும், ஆனால் துல்லியமான இடங்கள் வெளியிடப்படவில்லை.

2014 மார்ச் 8 ஆம் திகதி, கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்குச் சென்ற MH370 விமானம் திடீரென பாதை மாறி ரேடார் வரம்பில் இருந்து மறைந்தது. விமானத்தில் 12 மலேஷிய குழுவினர்கள் மற்றும் 227 பயணிகள் பயணித்துள்ளனர்.

அதிகமானோர் சீனப் பிரஜைகள். மேலும் மலேசியா, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா, இந்தியா, பிரான்ஸ், அமெரிக்கா, ஈரான், உக்ரைன், கனடா, நியூசிலாந்து, நெதர்லாந்து, ரஷ்யா மற்றும் தைவான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்திருந்தனர்.

புதிய ஆதாரங்கள் 

விமானம் காணாமல் போனதிலிருந்து, பல நாடுகள் இணைந்து இந்தியப் பெருங்கடலின் மிகப்பெரிய பகுதிகளைத் தேடி வந்துள்ளன.

இருப்பினும், முக்கிய எச்சங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. 2015 ஆம் ஆண்டு பிரெஞ்சு தீவான ரீயூனியனில் கிடைத்த விமான இறக்கை பகுதி MH370 யிலிருந்ததே என உறுதி செய்யப்பட்டது. ஆபிரிக்காவின் கிழக்குக் கரையோரத்திலும் சில சிதைவுகள் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டன.

10 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானம்! ஆழ்கடலில் தேடும் பணி மீண்டும் ஆரம்பம்.. | Malaysia Mh370 Missing Aircraft Search Relaunched

ஆனால் பெரிய எச்சங்கள் அல்லது உடல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு, புதிய ஆதாரங்கள் கிடைத்தால் விசாரணையை மீண்டும் திறக்கத் தயாராக இருப்பதாக மலேஷியா தெரிவித்தது.

'ஓஷன் இன்ஃபினிட்டி'யுடன் “கண்டுபிடிக்கப்படாவிட்டால் கட்டணம் இல்லை” என்ற ஒப்பந்தத்தின் கீழ் 15,000 சதுக்க கிலோமீட்டர் புதிய பகுதியில் தேடல் நடத்த ஒப்புக்கொள்ளப்பட்டது. எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே 70 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படும்.

கடலடித் தேடல் 

இந்த ஆண்டு ஏப்ரலில், தெற்கிந்தியப் பெருங்கடலில் மோசமான வானிலை காரணமாக தேடல் நிறுத்தப்பட்டது. MH370, 2014 மார்ச் 8 ஆம் திகதி அதிகாலை 12.41க்கு கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டு, அதிகாலை 6.30க்கு பீஜிங்கில் தரையிறங்க வேண்டியிருந்தது.

இரவு 2.14க்கு கடைசியாக இராணுவ ரேடாரில் மலாக்கா நீரிணையின் மேல் மேற்குத் திசையில் பறந்துகொண்டிருந்ததாக பதிவாகியுள்ளது. அரைமணிநேரத்துக்குப் பிறகு விமானத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

10 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானம்! ஆழ்கடலில் தேடும் பணி மீண்டும் ஆரம்பம்.. | Malaysia Mh370 Missing Aircraft Search Relaunched

விமானத்தில் இருந்தோரின் குடும்பத்தினர், உண்மையை அறிந்து கொள்ளவும், எதிர்கால விபத்துகளைக் தவிர்க்கவும் தொடர்ந்த தேடலை வேண்டி வருகின்றனர். சிலர் 2016ஆம் ஆண்டு மடகாஸ்கர் சென்று சிதைவுகளைத் தேடினர்.

மேலும் பல நிறுவனங்களுக்கு எதிராக நஷ்டஈடு கோரி வழக்குகளும் தொடரப்பட்டன. 2017ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா தலைமையிலான 120,000 சதுர கிலோமீட்டர் கடலடித் தேடல் நிறுத்தப்பட்டது.

மலேஷியாவின் விசாரணை

அதே ஆண்டில் வெளியிடப்பட்ட இறுதி அறிக்கை, பதில்களை வழங்க முடியாதது “மிகப் பெரிய துயரம்” எனக் கூறியது.

2018ஆம் ஆண்டு மலேஷியாவின் விசாரணை அறிக்கை, விமானம் தானியக்க இயக்கத்தில் அல்லாமல் கையேடு முறையில் திருப்பப்பட்டதாகவும், “மூன்றாம் தரப்பின் தலையீட்டை” நிராகரிக்க முடியாது என்றும் தெரிவித்தது.

10 ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேசிய விமானம்! ஆழ்கடலில் தேடும் பணி மீண்டும் ஆரம்பம்.. | Malaysia Mh370 Missing Aircraft Search Relaunched

ஆனால் விமானிகள் நோக்கமுடன் விபத்து ஏற்படுத்தியதாக இருந்த சில ஊகங்களையும், தொழில்நுட்ப கோளாறுகளையும் நிராகரித்தது.

புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், “இந்தப் புதிய முன்னேற்றம் MH370 உறவினர்களுக்கு முடிவு கிடைக்க மலேஷியா அரசு எடுத்துள்ள உறுதிப்பாட்டைக் காட்டுகிறது” என போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US