இலங்கையர் உட்பட்ட 12 பேருக்கு அனுமதி மறுத்த மலேசியா
இலங்கையர்கள் உட்பட்ட போலி சுற்றுலாப் பயணிகள் என சந்தேகிக்கப்படும் வெளிநாட்டினருக்கு எதிராக மலேசிய சோதனைச் சாவடிகள் மற்றும் எல்லை நிறுவனம் நேற்று(29.08.2025) பன்னிரண்டு நுழைவு மறுப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இந்த மீறல்களில் செல்லுபடியாகும் விசாக்கள் இல்லாதது, தேவையான தங்கும் கால இடைவெளிகளுக்கு இணங்கத் தவறியது மற்றும் கேள்விக்குரிய பயண நோக்கங்களைக் கொண்டிருந்தது ஆகியவை அடங்கும் என்று மலேசிய குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, ஒன்பது இலங்கையர்கள் மற்றும் மூன்று தாய்லாந்து நாட்டவர்களுக்கு, மலேசியாவுக்குள் நுழையும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனுமதி மறுக்கப்பட்ட இலங்கை குழுவில் 8 ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்கியிருந்தனர்.
நுழைவுப் புள்ளி
தாய்லாந்து நாட்டவர்களில் மூவரும் பெண்களாவர் என்று மலேசிய குடிவரவுத்துறை அறிவித்துள்ளது.
இதன்போது, மலேசிய அதிகாரிகள் உடனடியாக அதே நுழைவுப் புள்ளி வழியாக, அனுமதி மறுக்கப்பட்டவர்களை, தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்ப உத்தரவிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
