நுவரெலியாவில் இடம்பெற்ற மலையக சாசன பிரகடன நிகழ்வு
இந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் இனத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முகமாக சஜித் பிரேமதாசவுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையிலான மலையக சாசன பிரகடன நிகழ்வொன்று இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது நுவரெலியாவில் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
எதிர்கால திட்டங்கள்
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மலையக சாசனம் தொடர்பான விளக்கத்தையும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் எதிர்கால திட்டங்கள் பற்றியும் மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.
அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவிக்கையில், பொதுவாக தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக கடந்த தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் வெற்றியீட்டிய நிலையில் மக்களுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் வாக்கு கேட்கும் போது அவர்கள் வாக்களிக்க வேண்டும் என்று மக்களுக்கு தெரியும்.
ஆனால் ஒரு சிலர் தமிழ் முற்போக்கு கூட்டணி ஊடாக வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவான பின்னர் தற்பொழுது அவர்களின் சுயநலத்திற்காக பிரிந்து சென்றுள்ளனர்.
வருகின்ற தேர்தலில் இது தொடர்பாக மக்கள் அவர்களுக்கு தக்க பாடத்தினை புகட்டுவார்கள். அதேவேளை நேற்று (12) வெளியிடப்பட்டிருக்கின்ற மலையக சாசனம் என்பது மலையக மக்களுடைய தேவை அறிந்து நல்ல எண்ணத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு சாசனம் ஆகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |