யாழ். உள்ளிட்ட பல பகுதிகளில் மீண்டும் பரவும் மலேரியா: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் மீண்டும் மலேரியா காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஆறு சுகாதார வைத்திய அதிகாரி பகுதிகளில் Anopheles stephensi என்ற நுளம்புகளின் தாக்கம் இருப்பதால், மீண்டும் மலேரியா அச்சுறுத்தல் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தகவலறிந்த தகவல்களின்படி, அம்பாறை மாவட்டத்திலுள்ள, அக்கரைப்பற்று, திருக்கோவில், ஆலையடிவேம்பு மற்றும் அட்டாளைச்சேனை அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

மலேரியாவைப் பரப்பும் நுளம்புகள்
மேலும், யாழ்ப்பாணம் - பருத்தித்துறையிலும் இந்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் மலேரியா எதிர்ப்புப் பிரசாரத்தினால் 2016ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் வரை மேற்கொள்ளப்பட்ட பூச்சியியல் ஆய்வுகளின் மூலம் 2016ஆம் ஆண்டு மன்னாரிலும் அதன் பின்னர் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களிலும் முதன்முதலில் மலேரியாவைப் பரப்பும் நுளம்புகள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri