ஐக்கிய நாடுகள் சபையின் மகள் என்று பெயர் சூட்டப்பட்ட “மலாலா யூசுப்சாய்“
அமைதிக்கான நோபல் பாிசைப்பெற்ற, பாகிஸ்தானின் மனித உாிமைகள் ஆர்வலா் “மலாலா யூசுப்சாய்“ ஐக்கிய நாடுகளின் மகள் என்று அழைக்கப்பட்டுள்ளாா்.
நியூயோா்க்கில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் செய்தியாளா் சந்திப்பின் போது ஊடகவியலாளா் ஒருவர் இந்த உறவுமுறையை மலாலாவுக்கு சூட்டினாா்.
மலாலா யூசுப்சாய் தமது 24வயதில் திருமண பந்தத்தில் இணைந்துகொண்டமை தொடா்பில் கேள்வியை தொடுத்த ஊடகவியலாளா், ஐக்கிய நாடுகளின் மகள் மலாலா யூசுப்சாயின் திருமணம் குறித்து, ஐக்கிய நாடுகளின் செயலாளா் நாயகம் என்ன கூறுகிறாா் என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த, ஐக்கிய நாடுகளின் செயலாளாரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாாிக், ஐக்கிய நாடுகள் சபை, மலாலாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.
சிறுமிகளின் கல்வி தொடா்பில் குரல் கொடுத்தமைக்காக 2012ஆம் ஆண்டு மலாலா, தமது 12 வயதில் தாலிபான்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.
இதனையடுத்து அவர் தமது குடும்பத்துடன் இங்கிலாந்துக்கு புலம்பெயா்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



பதினாறாவது மே பதினெட்டு 17 மணி நேரம் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
