ஒருநாள் எமது தேசம் விடுதலையடையும்: பிரபல புலம்பெயர் தமிழ் தொழிலதிபர் திட்டவட்டம்(Video)
தாயக மக்களின் தேசிய விடுதலை போராட்டத்தில் மலையக மக்களின் பங்களிப்பு என்பது அளப்பரிய விடயம் என பிரபல புலம்பெயர் தமிழ் தொழிலதிபரும், ஐபிசி குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் இடம்பெற்ற மலையகம் 200 புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், ''ஏராளமான மலையை மக்கள் இன்று கல்வி நிலையிலே முன்னோக்கி செல்வதை நினைத்து பெருமையடைகிறேன்.
மலையக இளைஞர், யுவதிகள் தற்போது இலங்கையில் மாத்திரமல்லாது வெளிநாடுகளுக்கும் சென்று சிறந்த புத்திஜீவிகளாக மாறியுள்ளனர்.
இது எம் மக்களை பெருமைப்படுத்தும் விடயம் ஆகும்.
மேலும், நாங்கள் அனைவரும் இந்த மண்ணுக்கு உரித்தானவர்கள். இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள். ஒருநாள் எமது தேசம் விடுதலையடையும். அந்த விடுதலையை சுவாசிக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கின்றோம்." என தெரிவித்துள்ளார்.












