அடுத்த பிரதம நீதியரசராக ப்ரீதி பத்மன் சூரசேன..!
அடுத்த பிரதம நீதியரசர் பதவிக்கு ப்ரீதி பத்மன் சூரசேனவின் பெயரை, அரசியலமைப்பு பேரவை ஒருமனதாக அங்கீகரித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ப்ரீதி பத்மன் சூரசேனவின் பெயரை அண்மையில் அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரைத்தார்.
அதன்படி, இன்று (23) கூடிய அரசியலமைப்பு பேரவையால் இந்த பரிந்துரை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்
உயர் நீதிமன்ற அமர்வின் மூத்த நீதியரசர்களில் ஒருவரான பிரீதி பத்மன் சூரசேன, முன்னர் நீதித்துறை சேவை ஆணையத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார். அவர் பல உயர்மட்ட வழக்குகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார்.
மேலும், தேசபந்து தென்னகோன் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் நாடாளுமன்றக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.
இதற்கிடையில், தற்போதைய பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ இந்த மாதம் 27 ஆம் திகதி பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளமையால் இந்த புதிய நியமனம் மேற்கொள்ளப்படவுள்ளது.
You may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
