சர்வதேச ரீதியாக இலங்கை கடவுச்சீட்டுக்கு ஏற்பட்டுள்ள மாற்றம்
2025 ஆம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை 91வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
கடந்த ஆண்டு 96வது இடத்தில் இருந்த இலங்கை கடவுச்சீட்டு 5 இடங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளமை சிறம்பம்சமாகும்..
இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தற்போது 41 நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது ஒன் அரைவல் விசா மூலம் பயணிக்க முடியும்.
இலங்கை கடவுச்சீட்டு
இந்த தரவரிசை, சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் பிரத்தியேக தரவுகளை அடிப்படையாக கொண்டு, விசா இல்லாமல் அணுகக்கூடிய நாடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான கடவுசீட்டு சக்தி தரவரிசையில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ள. ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது.
இந்தியாவின் முன்னேற்றம்
பிரித்தானியா மற்றும் அமெரிக்கா 6வது மற்றும் 10வது இடங்களில் உள்ளன. இது கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்த கீழ்நோக்கிய போக்கினை வெளிப்படுத்தியுள்ளன.
இதேவேளை, கடந்த ஆண்டு 85வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டில் 77வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தற்போது இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam
