ஹிட்லரின் வீட்டை பொலிஸ் நிலையமாக மாற்ற முயற்சி: வலுக்கும் எதிர்ப்பு
ஜேர்மனியின் - ஆஸ்திரியாவில் அடொல்வ் ஹிட்லர் பிறந்த வீட்டை பொலிஸ் நிலையமாக மாற்றுவதற்கான முயற்சிகளிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வாதிகாரி அடொல்வ் ஹிட்லர் இந்த வீட்டிலேயே பிறந்தார். பேர்லினின் இல் உள்ள பதுங்குழியில் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டு 78 வருடங்களாகியும் அவர் பிறந்த இடம்குறித்து விவாதங்கள் காணப்படுகின்றன.
ஹிட்லர் தனது நாட்டில் தான் பிறந்தார் என்பதிலிருந்து விடுபட ஆஸ்திரியா போராடுகின்றது.
தவறான சமிக்ஞை
நியோநாஜிகளிற்கான வழிபாட்டுத்தலத்தை அகற்ற ஆஸ்திரியா விரும்புகின்றது. இதன் காரணமாக அந்த வீட்டை பொலிஸ் நிலையமாக மாற்றுவதற்கு அந்த நாடு முயல்கின்றது. எனினும் தற்போது அதற்கு பல்வேறு தரப்புக்களால் எதிர்ப்பும் உருவாகியுள்ளது.
ஹிட்லரின் வீட்டை பொலிஸ் நிலையமாக மாற்றுவதற்கான முயற்சிகள் தவறான சமிக்ஞையாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை அந்த பகுதி மக்கள் குழுவொன்றும் ஹிட்லர் பிறந்த வீட்டை பொலிஸ் நிலையமாக்கும் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நாஜி கட்சியின் செயற்பாடு
இது பேரழிவு முயற்சியாக அமையும் என தெரிவித்துள்ள என அந்த அமைப்பொன்றின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஹிட்லரின் வீட்டை எவ்வாறு பயன்படுத்துவது என்ற பிரச்சினை 1938 முதல் காணப்படுகின்றது.
ஜேர்மனி - ஆஸ்திரியாவை தன்னுடன் ஆக்கிரமித்த பின்னர், நாஜி கட்சி தனது ஸ்தாபகரின் பிறந்த இடத்தை கைப்பற்றி அதில் கலாச்சார நிலையமொன்றை ஏற்படுத்தியது.
யுத்தத்தின் பின்னர் அந்த வீடு பழைய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த வீடு ஒரு நூலகமாகவும் பாடசாலையாகவும் மாற்றுத்திறனாளிகளிற்கான அலுலவகமாகவும் காணப்பட்டது.