நிம்மதியான வழிபாட்டு இடமாக வெடுக்குநாறி மலையை ஏற்படுத்திக் கொடுங்கள் : ரவிகரன் வலியுறுத்து

Vavuniya Sri Lanka Government Northern Province of Sri Lanka
By Thileepan Dec 28, 2024 05:16 AM GMT
Report

வவுனியா (Vavuniya) வடக்கு - ஒலுமடு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் தமிழ் மக்கள் நிம்மதியான முறையில் வழிபடுவதற்கான வழி வகைகளை ஏற்படுத்துமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (27) இடம்பெற்ற போது அதில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரலில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்

ஏப்ரலில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்

குடிநீர் இன்றி மிகுந்த இடர்பாடுகள்

அவர் மேலும் தெரிவிக்கையில், வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கோ, பொதுமக்கள் சென்று வருவதற்கோ எவ்வித தடையுமில்லை என்ற நீதிமன்றத் தீர்ப்பிற்கு அமைவாக அங்கு மக்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிம்மதியான வழிபாட்டு இடமாக வெடுக்குநாறி மலையை ஏற்படுத்திக் கொடுங்கள் : ரவிகரன் வலியுறுத்து | Make Vedukkunari Hill A Peaceful Place Of Worship

இவ்வாறு அங்கு மக்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்ற போதும், இந்த ஆலயத்திற்குச் செல்வதற்கான பிரதான வீதி மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த கால ஆட்சியாளர்கள் அவ்வீதியை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசாங்கமானது அவ்வீதியை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு, குறித்த ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று வழிபாடுகளுக்காகச் சென்ற அடியவர்கள் குடிநீர் இன்றி மிகுந்த இடர்பாடுகளுக்கு முகங் கொடுத்திருந்தனர்.

இந்திலையில் தண்ணீர் தாகத்தால் தவித்த அடியவர்களுக்கு நீர் எடுத்துச் செல்லப்பட்ட போது பொலிஸாரால் குடிநீர், கோவில் வளாகத்திற்குள் எடுத்துச் செல்ல முடியாது எனவும் தடுக்கப்பட்டது.

வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாடு

இந்நிலையில், காலையில் கோவிலுக்கு வழிபாடுகளுக்குச் சென்ற மக்களோடு நானும் சென்றிருந்தேன்.

மாலை வரை தாகத்தால் தவித்து, குடிநீர் வராததால் கோவில் வளாகத்தில் இருந்த நீரோடையில் நீரை எடுத்து அருந்த வேண்டிய நிலையும் ஏற்பட்டிருந்தது.

நிம்மதியான வழிபாட்டு இடமாக வெடுக்குநாறி மலையை ஏற்படுத்திக் கொடுங்கள் : ரவிகரன் வலியுறுத்து | Make Vedukkunari Hill A Peaceful Place Of Worship

வெடுக்குநாறி மலை அமைந்துள்ள பகுதி தற்போது வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

எனவே ஆலய வளாகம் வனவளத் திணைக்களத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். குறித்த ஆலயம் பதிவு செய்வதற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகின்றது.

ஆகவே இந்த ஆலயத்தை பதிவு செய்வதற்கு இடையூறாக இருக்கின்ற விடயங்களைக் களைந்து, கூடிய விரைவில் பதிவு செய்வதற்கான நடடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மனைவியின் தாயை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற மருமகன்

மனைவியின் தாயை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற மருமகன்

அநுர அரசில் தொடரும் அதிரடிகள்! லஞ்சம் வழங்கிய வர்த்தகர்களின் பரிதாப நிலை

அநுர அரசில் தொடரும் அதிரடிகள்! லஞ்சம் வழங்கிய வர்த்தகர்களின் பரிதாப நிலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US