படகுப்பாதை விபத்து தொடர்பில் முறையான விசாரணை நடத்துக: சஜித் வலியுறுத்து
கிண்ணியாவில் இடம்பெற்ற ‘படகுப் பாதை’ விபத்து சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ(Sajith Premadasa) வலியுறுத்தினார்.
இதேவேளை, இந்த விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி, நிமல் லன்சா அந்தப் பகுதியில் பாலத்தை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டிய போதும், அது தொடர்பான வேலைத்திட்டம் ஸ்தம்பிதமடைந்திருந்தது என்றும் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், அங்கு மக்கள் பயணிப்பதற்கான படகுப் பாதை விபத்துக்குள்ளாகியுள்ளது என்றும், அந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிவாரணங்கள் மற்றும் இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அதேபோன்று குறித்த படகுப் பாதை இயங்கிய முறை மற்றும் அதன் சட்டப்பூர்வ தன்மை
ஆகியன குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாஸ
சபையில் வலியுறுத்தினார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 10 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
