பிரான்ஸ் அரசியலில் ஏற்பட்ட முக்கிய திருப்பம்: சபாநாயகராக தெரிவான மேக்ரான் ஆதரவாளர்
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான்(Emmanuel Macron) நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்ததைத் தொடர்ந்து, பிரான்ஸ் அரசியலில் குழப்பமான நிலை நீடித்துவருகிறது.
இந்நிலையில், பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேக்ரான் ஆதரவாளரான Yaël Braun-Pivet என்பவரை சபாநாயகராக தேர்ந்தெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நடந்து முடிந்த வாக்கெடுப்பு
பிரான்ஸ் நாடாளுமன்றத்தைப் பொருத்தவரையில் சபாநாயகர் பங்கு முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. குறிப்பாக பிரதமர் தேர்வில் அவர் முக்கியப் பங்காற்றுவார்.
இந்த சூழலில், நேற்று பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி சபாநாயகரைத் தேர்தெடுப்பதற்காக வாக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.
இதன்போது மூன்று சுற்றுகளாக நேர்மையாக நடந்த வாக்கெடுப்பின் முடிவில், மேக்ரான் ஆதரவாளரான Braun-Pivet 220 வாக்குகள் பெற்று சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
📣 Avec 220 voix au 3ème tour, Yaël Braun-Pivet (@YaelBRAUNPIVET), députée de la 5ème circonscription des Yvelines, est élue présidente de l'Assemblée nationale. #DirectAN pic.twitter.com/T6LhIsMV4B
— Assemblée nationale (@AssembleeNat) July 18, 2024
மேலும் கடந்த கால ஆட்சியிலும் இவர் சபாநாயகராக பதவி வகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள Braun-Pivetக்கு பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், அவரது தேர்வு, பன்முக உணர்வுகளின் வெளிப்பாட்டை உறுதி செய்யும் என்று கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |