ஆப்கான் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவைக்குள் சர்வதேச அளவில் தேடப்படும் முக்கியத் தீவிரவாதிகள்
ஆப்கான் புதிய இடைக்கால அரசுக்கு முகமது ஹசன் தலைவராகவும் அப்துல் கனி பராதரை துணை பிரதமராகவும் தாலிபன்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், இதில் சர்வதேச அளவில் தேடப்படும் முக்கியத் தீவிரவாதிகள் சிலர் இடைக்கால அரசில் அமைச்சர்களாக்கி உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றிய தாலிபான்கள் தலைமையிலான புதிய இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் முல்லா முகம்மது ஹசன் அகண்ட்ஜாதா தலைவராகவும், முல்லா பராதர், துணைத் தலைவர்களில் ஒருவராகவும் இருப்பார்.
வெளியுறவுத் துறை அமைச்சராக ஷேர் முகம்மது அப்பாஸ் ஸ்டானிக்சாயும், உள்துறை அமைச்சராக சிராஜுதீன் ஹக்கானியும் இருப்பார்கள் என்றும், பாதுகாப்பு அமைச்சராக முல்லா யாக்கூப் பதவி ஏற்பார் என தலிபன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,
