அலி கமேனி நியமித்த புதிய தலைமைத் தளபதி.. படைபலம் குறித்து பெருமிதம் கொள்ளும் ஈரான்!
ஈரானிய ஆயுதப் படைகளின் புதிய தலைமைத் தளபதியாக அயதுல்லா அலி கமேனி அண்மையில் நியமித்த மேஜர் ஜெனரல் தொடர்பில் ஈரானிய இராணுவம் எக்ஸ் பதிவு ஒன்றை இட்டுள்ளது.
புதிய தலைமைத் தளபதியாக அயதுல்லா அலி கமேனி அண்மையில் நியமித்த மேஜர் ஜெனரல் என தொடங்கும் குறித்த பதிவில் அவரின் தகைமைகள் பலங்களை ஈரானிய இராணுவம் பெருமிதமாக எடுத்துக் காட்டியுள்ளது.
அதன்படி, மேஜர் ஜெனரல் சையத் அப்துல்ரஹீம் மௌசவி, மீள்தன்மை மற்றும் அனுபவத்தால் தலைமை தளபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
சிறந்த படைவீரன்
1959ஆம் ஆண்டு ஈரானிய நகரமான கோமில் பிறந்த மௌசவி, தனது தாய்நாட்டின் மீதான அன்பு மற்றும் இஸ்லாத்தின் மீதான நம்பிக்கையால் சிறு வயதிலிருந்தே உந்தப்பட்டு, 1979இல் இராணுவ அதிகாரிகள் முகாமில் நுழைந்தார்.
அவர், சதாம் ஈரானுக்கு எதிராக திணிக்கப்பட்ட போரின் முன்னணியில் உடனடியாக ஈடுபட்டார்.
போர்க்களங்களில் எட்டு ஆண்டுகள் தொடர்ச்சியான இருப்புடன், வால்ஃபஜ்ர், பெய்ட்-அல்-மொகாதாஸ் போன்ற முக்கிய நடவடிக்கைகளில் அவர் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார்.
Who is the Major general that Ayatollah Khamenei has recently appointed as the new chairman of the Chief of Staff of the Iranian Armed Forces?
— Daily Iran Military (@IRIran_Military) June 21, 2025
Major General Seyed Abdolrahim Mousavi; a commander forged by resilience and experience
Born in 1959 in the holy city of Qom, Mousavi,… pic.twitter.com/103pw4RYcX
போருக்குப் பிறகு, ஈரானில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மேலாண்மையில் முனைவர் பட்டம் பெற்று தனது கல்விப் படிப்பைத் தொடர்ந்தார்.
பல ஆண்டுகளாக, அவர் முக்கிய பதவிகளில் இடம்பிடித்து, இராணுவத்தின் கூட்டுப் படைத் தளபதியிலிருந்து இராணுவத்தின் துணைத் தளபதி, கடைசியாக இராணுவத் தளபதி, தற்போது, ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியின் புதிய தலைவராக அடி எடுத்து வைத்துள்ளார்.
பொதுவாக, நாடுகள் தமது படைத்தளபதிகள் உள்ளிட்ட முக்கிய பலங்கள் குறித்து தகவல்களை வெளியிடுவது அரிது. இருப்பினும், ஈரான் தற்போது அதன் படைப்பலத்தை காட்டும் வகையில் இவ்வாறான தகவல்களை பகிரங்கப்படுத்துவது குறிப்பிடத்தக்கதாகும்.

குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy News Lankasri
