"அமெரிக்க வெளிவிவகார கொள்கையில் ஈழத் தமிழர்கள் தொடர்பில் முக்கிய மாற்றம்" (Video)
அமெரிக்க வெளிவிவகார கொள்கையில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு வரவேண்டும் என்பதை முக்கியமான விடயமாக அமெரிக்க முன் நகர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்ததாக உலகத் தமிழர் பேரவை பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“இதுவரை காலமும் இலங்கை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வேண்டும் என சர்வதேச அரங்குகளில் இந்தியா மட்டும் தான் கூறிக்கொண்டிருந்தது.
மேலும் மார்ச் மாதம் அளவில் இலங்கையில் அமெரிக்க உயர்ஸ்தானிகர் ஜீலி சுங் கலந்துரையாடல்களில் ஈடுப்பட்ட போது தமிழ் மக்களுக்கான தீர்வு முக்கியம் என்பதை வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், புலம்பெயர் அமைப்புகள் மீது தடை விதிப்பதும் நீக்குவதும் இலங்கை அரசாங்கத்தால் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்ற ஒரு செயற்பாடாகவே காணப்படுகின்றது. அதாவது மகிந்த அரசாங்கம், கோட்டாபய அரசாங்கம்,மற்றும் ரணில் அரசாங்கம் என ஒவ்வொரு அரசாங்கமும் இந்த செயற்பாட்டை செய்கின்றது.
இந்த செயற்பாடு அவர்களின் இராஜாதந்திரமாகவோ அல்லது அரசியல் தேவையாகவோ அமையலாம்.
எவ்வாறெனினும் இலங்கை அரசாங்கம் இவ்வாறு செயற்படுவதனால் எமது பிரச்சாரங்களிலோ,வேலைத்திட்டங்களிலோ எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை.
நாங்கள் தொடர்ந்தும் சர்வதேச அரசாங்கங்களையும் நிறுவனங்களையும் சந்தித்துக்கொண்டு தான் இருக்கின்றோம். புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை எப்போதும் பெரிதாக நினைக்கவில்லை.”என கூறியுள்ளார்.