அம்பாறையில் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் கைது!
அம்பாறை- கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(22.11.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 2320 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகள்
குறித்த சந்தேகநபர் கல்முனை குடி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் கடந்த காலங்களில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த சந்தேகநபரின் உதவியாளர்களாகச் செயற்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் விற்பனை நடவடிக்கைகளுக்கு பிரதான சந்தேகநபருக்கு உதவியதுடன் அவர்கள் வசம் இருந்தும் ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.
பொரளையில் அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தீ விபத்து! விரைந்து செல்லும் தீயணைப்பு வாகனங்கள்