நீதிமன்றில் முன்னிலையான பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர்
தங்காலையில் செப்டெம்பர் 22 ஆம் திகதி கைப்பற்றப்பட்ட பொருந்தொகை ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைபொருள் தொடர்பிலான சந்தேகநபர் இன்று (27.11.2025) சட்டத்தரணி மூலம் தங்காலை நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
தங்காலை பொலிஸாரின் வேண்டுகோளின் பேரில் நீதிபதி அவரை அடுத்த மாதம் ஒன்றாம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
தென்பகுதியின் பாதாள உலகின் கோட்பாதர் என அழைக்கப்படும் உணாகூறுவே சாந்தவின் பிரதான நண்பரான இவர் இலங்கையில் போதைப்பொருள் பரிவர்த்தையின் பிரதானியாக செயற்பட்டவர்.

போதை பொருள் கைப்பற்றல்
தங்காலையில் செப்டெம்பர் 22 ஆம் திகதி பொலிஸார் பெரும் தொகை போதை பொருட்களை கைப்பற்றும் போது அங்கிருந்து தப்பிச்சென்றவரை கண்டுபிடிக்க பொலிஸார் பல சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இரண்டு மாதங்களின் பின்னர் அவர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் கரைக்கு கொண்டு வந்தவர் இவர் தான்.
பூமிதெலா என்றழைக்கப்படும் இவர் துப்பாக்கிகள் வைத்திருந்தமை மற்றும் கொலை,கொள்ளை போன்ற குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்தவராவார்.
பிரித்தானியாவின் இலையுதிர்கால பட்ஜெட் 2025 - ரேச்சல் ரீவ்ஸ் அறிவித்த புதிய வரி திட்டங்கள் News Lankasri