ரணிலுடன் இணையும் புதிய முகங்கள்.. ஹரின் வெளியிட்ட முக்கிய தகவல்
இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) புதிய முகங்களுடன் ஒரு புதிய பரிமாணத்தைப் பெறும் என்று கட்சியின் பிரதிப் பொதுச்செயலாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று ( 23.02.2026 ) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யாராக இருந்தாலும் சுடுங்கள்! அக்குரேகொட இரட்டைக்கொலையில் முன்னாள் இராணுவ அதிகாரியின் அதிர்ச்சி வாக்குமூலம்
புதிய கட்டமைப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி பாரிய மாற்றங்களுக்கு உள்ளாகவுள்ளது.
இதில் புதிய இளம் முகங்கள் முக்கியப் பங்காற்றுவார்கள். எதிர்வரும் மார்ச் மாதம் முதல் கிராமமட்ட அளவிலான கட்சிப் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

டிசம்பர் மாதத்திற்குள் கட்சியின் புதிய கட்டமைப்பு முழுமையடையும் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் உள்ள அரசியல் அறிவையும் அனுபவத்தையும் இளம் தலைமுறையினருக்குக் கடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
எமது இளம் தலைமுறையினர் தற்போதைய கட்சித் தலைவரிடமிருந்து கற்றுக்கொள்ளாமல் போய்விடுவார்களோ என்ற அச்சம் எமக்கு இருந்தது.
எனவே, இளைஞர்கள் அவரிடமிருந்து சிறந்த முறையில் கற்றுக்கொள்வதை நாங்கள் உறுதி செய்வோம், என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.