நாட்டை உலுக்கிய இரட்டைக் கொலை - துப்பாக்கிச்சூட்டுக்குப் பின் சுத்தாவிடமிருந்து வந்துள்ள பதில்
அக்குரேகொட இரட்டைக் கொலை துப்பாக்கிதாரியென சந்தேகிக்கப்படும் சுனில் ரஞ்சித் என்ற நபர் விசாரணைகளின் போது முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் தாம் இராணுவத்தில் இருந்த காலத்தில் கரந்தெனிய சுத்தாவை அடையாளம் கண்டதாக அவர் கூறியுள்ளார்.
அக்காலகட்டத்தில் கரந்தெனிய சுத்தாவும் இராணுவப் பயிற்சியில் இருந்துள்ளார். இராணுவத்திலிருந்து விலகிய பின் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு விளக்கமறியலில் இருந்தபோது, கொலை சம்பவம் ஒன்று தொடர்பில் விளக்கமறியலில் இருந்த கரந்தெனிய சுத்தாவை மீண்டும் சந்தித்து நண்பராகியுள்ளார்.
கரந்தெனிய சுத்தா கூறிய விடயம்
“சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி இப்போது எனது வழக்குகளுக்காக முன்னிலையாவதில்லை. அவர் 'லோகு பெட்டி'யின் வழக்குகளிலேயே முன்னிலையாகின்றார். எனவே அவரை முடிக்க வேண்டும்” என கரந்தெனிய சுத்தா தம்மிடம் கூறியதாக துப்பாக்கிதாரி தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்குச் செல்வதற்கு முன்னரும் தாம் ஹெரோயின் உட்கொண்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரின் சாரதி யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.

துப்பாக்கிதாரிகள் இருவரும் சாரதியும் ஒருவரையொருவர் அறியாதவர்கள் எனத் தெரியவந்துள்ளது. கொலையின் பின் துப்பாக்கிகள் வேறு வாகனத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
மறைந்திருப்பதற்கான இடம்
கொலைக்குப் பின்னர் கொட்டாவையிலிருந்து பேருந்தில் தெஹிவளைக்குச் சென்று, அங்கிருந்து அம்பலாங்கொடவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
தாம் எங்கு மறைந்திருக்க வேண்டும் என கரந்தெனிய சுத்தாவவிடம் கேட்டபோது, “சரியான இடம் இல்லை, எங்காவது ஓரிடத்தில் இரு” என அவர் பதிலளித்துள்ளார் என தெரியவந்துள்ளது.
மேலும் சந்தேகநபரான துப்பாக்கிதாரியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam