உலகளாவிய நிதிச் சந்தையில் பெரும் மாற்றம்: வளரும் நாடுகளிலிருந்து வெளியேறும் முதலீடுகள்
ஈரான் போர் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலால், உலகளாவிய நிதிச் சந்தைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முதலீட்டு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய தரவு விளக்கப்படங்கள் தெரிவிக்கின்றன.
போர் தொடங்கியதில் இருந்து, முதலீட்டாளர்கள் ஆபத்து நிறைந்த வளரும் நாடுகளின் சந்தைகளிலிருந்து தங்களது பணத்தை வேகமாகத் திரும்பப் பெற்று வருகின்றனர்.
முதலீடுகள் வெளியேற்றம்
கடந்த ஒரே வாரத்தில் மட்டும் சுமார் 15 பில்லியன் டொலர் மதிப்பிலான முதலீடுகள் ஆசிய மற்றும் இலத்தீன் அமெரிக்கச் சந்தைகளிலிருந்து வெளியேறியுள்ளன.
இதற்குப் பதிலாக, பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் அமெரிக்க டொலர் மற்றும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள எரிசக்தி விலை உயர்வு, பணவீக்கத்தை அதிகரித்து உலகளாவிய விநியோகச் சங்கிலியைப் பாதித்துள்ளது.

பங்குச் சந்தைகள் கடும் சரிவு
இதன் விளைவாக, சர்வதேச பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, மசகு எண்ணெய் இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் நாடுகளின் நாணய மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவது அந்நாடுகளின் பொருளாதாரத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
உலகப் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு மந்தநிலையை நோக்கிச் செல்லும் என்ற அச்சம் நிலவுவதால், பெரிய நிதி நிறுவனங்கள் தங்களது முதலீட்டு உத்திகளை முழுமையாக மாற்றி அமைத்து வருவதாக இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam