பிரித்தானிய கடவுசீட்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
பிரித்தானிய கடவுசீட்டில் செய்யப்பட இருக்கும் மாற்றம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் மன்னராக சார்லஸ் தெரிவானதை தொடர்ந்து கடவுசீட்டு தொடர்பிலான விதிகளில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்லஸ் பெயரால் கடவுசீட்டு
அதாவது, தற்போது பிரித்தானிய கடவுசீட்டுகள் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பெயரால் வழங்கப்பட்டு வருகின்றன.
விதி மாற்றங்களைத் தொடர்ந்து, இனி பிரித்தானிய கடவுசீட்டுகள் மன்னர் சார்லஸ் பெயரால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சார்லஸ் மன்னரின் பெயரால், கடவுசீட்டு வைத்திருப்பவரை தடை எதுவுமின்றி நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கவும், அவருக்குத் தேவையான உதவியும் பாதுகாப்பும் வழங்கவும் பிரித்தானிய மன்னரின் மாகாணச் செயலாளர் கோருகிறார் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது இந்த மாற்றம் நிகழும்
இந்த மாற்றம் என்ன திகதியில் நிகழ இருக்கிறது என்பது குறிப்பிடப்படவில்லை. ஆனால், இந்த இந்த ஆண்டிலேயே அந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை இந்த மாற்றம் செய்யப்படாத, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள கடவுசீட்டுகள் அவை காலாவதியாகும் வரை செல்லுபடியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சுவிட்சர்லாந்தின் Credit Suisse-UBS வங்கிகள் இணைப்பால் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு! News Lankasri

லண்டனில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்... தாயாரும் இரண்டு பிள்ளைகளும்: வெளிவரும் பகீர் பின்னணி News Lankasri
