பெரும்போக வேளாண்மை அறுவடை பணிகள் மீண்டும் ஆரம்பம்

Ampara Climate Change Eastern Province
By Farook Sihan Mar 15, 2025 02:16 PM GMT
Report

அண்மையில் பெய்த திடீர் மழை வீழ்ச்சி காரணமாக ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட பெரும்போக வேளாண்மை அறுவடை தடைப்பட்டிருந்தது.

எனினும் தற்போது காலநிலை சீரமைந்துள்ளதன் காரணமாக மீண்டும் பொத்துவில் ,அக்கரைப்பற்று ,சம்மாந்துறை,நிந்தவூர்,அம்பாறை ,இறக்காமம் ,மத்திய முகாம் ஆகிய இடங்களில் பயிரிடப்பட்ட வேளாண்மை விவசாயிகளினால் நெல் அறுவடை இயந்திரங்கள் மூலமாக அறுவடை செய்யப்பட்டு வருகின்றது.

நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ,விளைச்சல் கடந்த போகங்களை விட திடீர் மழை வீழ்ச்சி காரணமாக குறைவடைந்த போதிலும் நெல்லுக்கான கேள்வி அதி உச்சத்தில் காணப்படுகின்றது.

அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு விசேட குழு நியமிப்பு

அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு விசேட குழு நியமிப்பு

வேளாண்மை செய்கை

இது தவிர தாம் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் கடன் பட்டு வேளாண்மை செய்கை மேற்கொண்ட போதிலும் தமது வேளாண்மை மழையினால் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பெரும்போக வேளாண்மை அறுவடை பணிகள் மீண்டும் ஆரம்பம் | Major Agricultural Harvest Operations Have Resumed

அத்துடன் அறுவடை செய்யப்படும் நெல்லினை கொள்வனவு செய்வதில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர்களை விட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும்,அரிசி ஆலை உரிமையாளர்களுமே அதிகளவில் நெல்லினை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்வனவு செய்து வருகின்றனர்.

இப்பெரும் போக வேளாண்மைச் செய்கை காலநிலை மாற்றம் விலைவாசி காரணமாக எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள்

மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள்

விவசாயிகள் கவலை

கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியான மழை பெய்ததன் காரணமாக அறுவடை இயந்திரங்கள் வயல் நிலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதனால் நெல் அறுவடையில் ஈடுபடுவது சிரமமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெரும்போக வேளாண்மை அறுவடை பணிகள் மீண்டும் ஆரம்பம் | Major Agricultural Harvest Operations Have Resumed

வேளாண்மை அறுவடை இடம்பெறும் நேரத்தில் கடும் மழை ஏற்பட்டதால் தமது வேளாண்மை நீரில் மூழ்கிக் காணப்படுவதால் அறுவடை செய்ய முடியாது உள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

ஏனைய போகங்களை விட இப்பெரும் போகத்தில் விளைச்சல் குறைவடைந்துள்ளதால் பாரிய நஸ்டத்தினை எதிர்நோக்கியுள்ளதாகவும் அடுத்த சிறுபோகத்தில் மீண்டும் எவ்வாறு நெற்செய்கையில் ஈடுபடுவது என்பது பற்றி பிரதேச விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தவிர அண்மையில் பெய்த மழை மற்றும் காட்டு யானைகளின் வரவினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வேளாண்மையை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மது போதையில் கைகலப்பு! 4 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி

மது போதையில் கைகலப்பு! 4 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US