மட்டக்களப்பில் கோர விபத்து : ஒருவர் ஸ்தலத்திலேயே பலி
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்று(21.10.2025) காலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
மட்டக்களப்பு கல்முனை வீதியில் களுவாஞ்சிகுடி பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சீமெந்து பக்கட்களை ஏற்றிய லொறி ஒன்று களுதாவளை பொது நூலகத்திற்கு அருகாமையில் பிரதான வீதியை கடந்துகொண்டிருந்த முதியவர் ஒருவர் மீது மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் டிப்பர் சாரதி களுவாஞ்சிகுடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் களுதாவளை பகுதியை சேர்ந்த 70வயதுடைய ரத்னம் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்தலத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலம் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


சோழனை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்திய நிலா.. காதல் மலர்ந்ததா? அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri