மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ள மைத்திரி
ரிட் மனு தாக்கல்
முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் தனக்கெதிரான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கை இடைநிறுத்துமாறு கோரியே ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கு
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றால் சந்தேகநபராக பெயரிடப்பட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கான தேசிய கத்தோலிக்கக் குழுவின் உறுப்பினர் வணக்கத்துக்குரிய தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ மற்றும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை சவாலுக்கு உட்படுத்தியே மைத்திரிபால சிறிசேன, இன்று மேன்முறையீட்டு நீதிமன்றை நாடியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் அக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், கடந்த செப்டெம்பர் 16ஆம் திகதி அறிவித்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri