இரகசியங்களை வெளியிடத் தயாராகும் மைத்திரி?
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் பற்றிய விபரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி பல்மடுல்ல பகுதியில் நடைபெற்ற சுதந்திரக் கட்சி கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தம்மை கைது செய்யும் நோக்கில் பலர் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் பற்றி பேசி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், உரிய நேரத்தில் தாக்குதல் பற்றிய தகவல்களை தாம் வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டுக்களை தம் மீது சுமத்த முயற்சிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது ஆட்சிக் காலத்தில் ஐந்து ஆணைக்குழுக்கள் நிறுவியதாகவும் அதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய ஆணைக்குழு பற்றி மட்டுமே பேசப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மோசடிகள் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் பற்றி யாரும் பேசுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூன்றாம் தரப்பு தலையிடக்கூடாது! - மகிந்தவிடம் சீனா முன்வைத்த கோரிக்கை (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
