வீட்டில் இருந்து வெளியேறிய மைத்திரிபால! உயர்நீதிமன்ற உத்தரவே காரணம்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வாரம், கொழும்பு பேஜெட் வீதி இல்லத்தை விட்டு வெளியேறி கொழும்பு 7 இல் உள்ள அரச இல்லத்தில் குடியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவுக்கு அமைய அவர் குறித்த வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் கொழும்பு பேஜெட் வீதியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்யசோதி சரவணமுத்து ,இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவின் விசாரணையின்போது, நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், 2019 அக்டோபரில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை இடைநிறுத்தி இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
இதன்படியே மைத்திரி வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

சிங்கிள் பசங்க: மனம் விரும்புதே Round இல் எல்லை மீறிய போட்டியாளர்கள்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள் Manithan
அறிவுக்கரசி வீடியோவாக காட்டிய விஷயம், கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam