மூட்டை முடிச்சுக்களை கட்டும் மற்றுமொரு முன்னாள் ஜனாதிபதி
கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்காக தனது உடைமைகளை தயார் செய்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அடுத்து வரும் சில தினங்களில் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி விடுவதாக மைத்திரி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதம் நீக்க சட்டம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அநுர அரசாங்கம் பழிவாங்கியதா...!
அநுர அரசாங்கம் உங்களைப் பழிவாங்கியதா என மைத்திரியிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ஜே.ஆர். ஜெயவர்த்தன காலத்தில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வீட்டுவசதி மற்றும் அமைச்சரவை அமைச்சர்களுக்கு வசதிகளை வழங்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
மகிந்த வெளியேற்றம்
அந்தச் சட்டத்திற்கமைய, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டன.
புதிய அரசாங்கம் சட்டத்தை இரத்து செய்த நிலையில் நாங்கள் வெளியேறுகின்றோம். அதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என மைத்திரி குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது குடும்பத்துடன் கொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டை கார்ல்டன் இல்லத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



