மைத்திரி கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்-சரத் பொன்சேகா
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கான தவறை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முற்றாக ஏற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இழப்பீடுகள் செலுத்துவதால் நியாயம் கிடைக்காது
இழப்பீடுகளை செலுத்துவதன் மூலம் மாத்திரம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நாட்டுக்கு நியாயம் கிடைக்காது. இதனால், முன்னாள் ஜனாதிபதி இதனை விட கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
இலங்கையில் மரண தண்டனை நடைமுறையில் இல்லாத காரணத்தினால், சி்றைத்தண்டனையாவது அவருக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நடந்த குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை செலுத்துமாறு உயர் நீதிமன்றம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே பொன்சேகா இதனை தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 28 நிமிடங்கள் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
