கர்தினாலுக்கு கிடைத்த பெருந்தொகை பணம் தொடர்பில் கேள்வியெழுப்பிய மைத்திரி
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கிடைத்த பணத்திற்கு என்ன நேர்ந்தது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.
பொலன்னறுவை பிரதேசத்தில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் பின்னர் கர்தினாலுக்கு பெருந்தொகை பணம் கிடைக்கப்பெற்றதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கர்தினாலுக்கு நன்கொடை
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தாம் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் நட்டஈடு வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் கர்தினாலுக்கு வெளிநாடுகளிலிருந்தும் பல்வேறு தரப்பினரிடமும் இருந்து கிடைக்கப் பெற்ற நன்கொடைகளில் 5 சதமேனும் உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை அவர் குறிப்பிட்டுள்ளார்.
கர்தினால் தமக்கு எதிராக 400க்கும் மேற்பட்ட வழக்குகளை தொடர்ந்துள்ளதாகவும் இது கின்னஸ் சாதனை எனவும் அவர் கூறியுள்ளார்.
கத்தோலிக்க அமைப்புக்கள், உலக நாடுகள், இங்கையின் செல்வந்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கர்தினாலுக்கு நன்கொடை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த பணம் எவ்வாறு செலவிடப்பட்டது என்பது குறித்த விபரங்களை கர்தினால் வெளியிட வேண்டுமென கோரியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |