உண்டியல் குலுக்கலை கொழும்பில் ஆரம்பிக்க போகும் மைத்திரி
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக செலுத்த வேண்டிய 10 கோடி ரூபா இழப்பீட்டை செலுத்த தன்னிடம் பணம் இல்லை என்பதால், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த பின்னர் தனக்கு நெருக்கமானவர்களிடம் பணத்தை சேகரிக்கும் நடவடிக்கைகளை கொழும்பில் ஆரம்பிக்க உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, கடந்த செவ்வாய் கிழமை ஒருவர் வந்து, தான் உண்டியலில் சேகரித்த பணத்தை எனக்கு வழங்கினார்.
எனக்கு வேறு வருமானம் இருக்கவில்லை
நாடாளுமன்றத்தில் முப்பது ஆண்டுகள் உறுப்பினராகவும் அமைச்சராகவும் பணியாற்றிய காலம் மற்றும் ஜனாதிபதி பதவி வகித்த காலத்தில் எனக்கு கிடைத்த கொடுப்பனவுகளை தவிர வேறு வருமானங்கள் இருக்கவில்லை.
பொலன்நறுவை வீட்டை கடன் வாங்கியே கட்டினேன்
நான் இந்த பதவிகளை வகித்த காலத்தில் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் நாடாளுமன்றத்திற்கும் எனது சொத்து, வருமான விபரங்களை வழங்கியுள்ளேன்.
எனக்கு வேறு காணிகளோ, வர்த்தகங்களோ இல்லை.நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த காலத்தில் அரச வங்கியில் பெற்றுக்கொண்ட கடனிலேயே பொலன்நறுவையில் உள்ள வீட்டை நிர்மாணித்தேன் எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
