தாய்லாந்து தப்பிச்சென்ற மைத்திரி : எழுந்துள்ள குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தப்பிச் செல்வதற்காகவே தாய்லாந்திற்கு சென்றதாக தனக்கு தனிப்பட்ட முறையில் சந்தேகம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எனவே, முன்னாள் ஜனாதிபதியை உடனடியாக அழைத்து சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரியை மறைப்பதற்காகவே மைத்திரிபால சிறிசேன பொய் பேசுகிறார்.
உடனடி நடவடிக்கை
அப்பாவி மக்களின் மரணத்திற்கு காரணமான நபரை மறைக்க முயற்சிப்பதோடு விசாரணையை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார் என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது.
மைத்திரி நாட்டில் பிரச்சினைகளை ஏற்படுத்திவிட்டு தாய்லாந்திற்கு சென்று விட்டாரே என அஞ்சுகிறோம். இது ஒரு தப்பித்தல் என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன்.
அவரை உடனடியாக வரவழைத்து சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளை நாம் கேட்டுக்கொள்கிறோம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |