டலஸ் அணியில் இணையும் மொட்டுக்கட்சியின் 11 எம்.பிக்கள்! மைத்திரி - சம்பிக்க - டலஸ் - விமலின் புதிய கூட்டணி
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, சுதந்திர மக்கள் காங்கிரஸ், உத்தர லங்கா சபாகய, 43வது படையணி, அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான அணி மற்றும் இலங்கை மக்கள் கட்சி ஆகியன இணைந்து ஒரு கூட்டணியின் கீழ் போட்டியிட தயாராகி வருவதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்
இது சம்பந்தமாக இந்த கட்சிகளின் தலைவர்கள் இடையில் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சுதந்திர மக்கள் காங்கிரஸின் டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட தரப்பினருடன் சில சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
இரண்டு தரப்புக்கும் இடையிலான மிக முக்கியமான பேச்சுவார்த்தை அண்மையில் முன்னாள் ஜனாதிபதியின் வீட்டில் நடந்துள்ளது.
இதனிடையே புதிய கூட்டணியை உருவாக்குவது சம்பந்தமாக சுதந்திர மக்கள் காங்கிரஸ், விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, மருத்துவர் ஜீ. வீரசிங்க, சமசமாஜக்கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகிய தரப்பினருக்கு இடையில் தனித்தனியா சில சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
புதிய கூட்டணியை உருவாக்குவதற்காக இந்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாக அதில் கலந்துக்கொண்ட கட்சி ஒன்றின் தலைவர் கூறியுள்ளார்.
டலஸ் அணியில் இணையும் மொட்டுக்கட்சியின் 11 எம்.பிக்கள்
அதேவேளை டலஸ் அழகப்பெரும உட்பட சில கட்சிகள் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட உருவாக்கும் கூட்டணிக்கு ஆதரவளிக்க, பொதுஜன பெரமுனவின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளனர்.
பொதுஜன பெரமுனவும், ஐக்கிய தேசியக்கட்சியும் இணைந்து கூட்டணியாக தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, சுதந்திர மக்கள் காங்கிரஸ், உத்தர லங்கா சபாகய, 43 வது படையணி என்பன தனியான கூட்டணியின் கீழ் தேர்தலில் போட்டியிடும்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பன தனித்தனியாக போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 2 நாட்கள் முன்
![வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்?](https://cdn.ibcstack.com/article/6da58c7c-2324-4cb5-a9bb-9e9de56eb1b7/25-67ab23c613b2e-sm.webp)
வேலைக்காக தினமும் மலேசியா செல்லும் இந்திய பெண் - ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்கிறார்? News Lankasri
![நடிகர் கார்த்தியின் மகன் கந்தனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே?.. எங்கே சென்றுள்ளார் பாருங்க](https://cdn.ibcstack.com/article/b6b960dd-630d-4e70-b0a7-f029c87b0e63/25-67ab21be2ee71-sm.webp)