கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேக நபர் கைது
போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவியல் கும்பல் தலைவருமான சஞ்சீவ குமார சமரரத்னேவை சுட்டுக் கொன்ற சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பாலவி பகுதியில் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை (STF) அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 34 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குற்றவியல் கும்பல் தலைவர்
குற்றவியல் கும்பல் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன, இன்று (19) காலை 10.00 மணியளவில் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் 05 ஆம் இலக்க நீதிமன்றத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
நீதிமன்ற வளாகத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் கூண்டில் இருந்து சஞ்சீவ இறங்கவிருந்தபோது அந்த இடத்திற்கு வருகைத்தந்த சந்தேகநபரால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபர் பல முறை துப்பாக்கிச் சூடு நடத்திய பிறகு, துப்பாக்கியை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு கூண்டில் உள்ள ஒரு கதவு வழியாக தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சட்டத்தரணிகள் நீதித்துறை கடமைகளுக்குப் பயன்படுத்தும் குற்றவியல் நடைமுறைச் சட்ட புத்தகத்தில் பக்கங்களை வெட்டி துப்பாக்கியை மறைத்து வைத்திருந்ததாகவும், நீதிமன்ற வளாகத்தில் அவருக்கு ஆதரவளித்த பெண் ஒருவரால் குறித்த புத்தகம் அவருக்கு வழங்கப்பட்டதாகவும், இது தொடர்பில் விசாரணை நடந்து வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும் சந்தேகநபர் முன்னாள் இராணுவ அதிகாரி என்றும் கூறப்பட்டுள்ளது.
you may like this