நாமல் தொடர்பில் முக்கிய ஆதாரத்தை அம்பலப்படுத்திய சிங்கள ஊடகம்
இலங்கை வங்குரோத்தடைந்துள்ள நிலையில் கட்டாரில் உள்ள முன்னணி நிதி நிறுவனத்தின் நிதி இயக்குநராக நாமல் செயற்படுவதாக தெரிய வந்துள்ளது.
கட்டாரின் முன்னணி நிறுவனம் ஒன்றில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ முக்கிய பதவியில் செயற்படுவதாக லங்காஈநியூஸ் ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.
இலங்கை நிதி ரீதியாக வங்குரோத்து நிலையில் இருந்தாலும், கட்டாரில் நிதி உதவி மற்றும் ஆலோசனை சேவைகளில் முன்னணி பங்காளியான ALBG எனப்படும் நிதி நிறுவனத்தின் நிதிப் பணிப்பாளராக நாமல் ராஜபக்ச செயற்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை வங்குரோத்து நிலைமைக்கு செல்ல காரணம் என்ன என்பதனை அறிந்துகொள்வதற்கு இது ஆதாரம் என அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
ALBG நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் நாமல் ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் பெரும்பாலான உறுப்பினர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.